இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் பயன்பெறும் வகையில், மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், ஜூன் 3-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளன.
எனவே, தனித்தேர்வர்கள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் திங்கட்கிழமைக்குள் (நாளை) விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்திற்கும் தேர்வுக்கட்டணம் ரூ. 50, முதலாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு ரூ. 100, இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கு ரூ. 100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ. 15, ஆன்லைன் பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ. 70, சிறப்பு அனுமதித் திட்டம் (தட்கல்) பெறுவதற்கு ரூ. 1,000 என தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.