ஊட்டி: வீட்டு மேற்கூரை மீது காட்டெருமை விழுந்து விபத்து

ஊட்டியில் வறட்சி காரணமாக உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை ஒன்று தவறி வீட்டின் மேற்கூரை மீது விழுந்ததில் ஓடுகள் உடைந்து சேதமடைந்தன. இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் பிரசன்னா குட்டன் தலையில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற குடும்பத்தினர் காயமின்றி தப்பினர். காட்டெருமைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி