ஊட்டி: 35 வயது பெண் காட்டு யானை சாவு

முதுமலை புலிகள் காப்பகத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிராஸ்கட் கண்காணிப்பு கோபுரம் அருகே கண்டெடுக்கப்பட்ட யானையின் பிரேத பரிசோதனையில், உள் உறுப்புகள் பாதிப்பு காரணமாக இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய உடற்பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி