தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை பொறியியல் துறை திட்டங்கள், தோட்டக்கலைத் துறை திட்டங்கள் என பல திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூட்டுறவு துறை, பொது சுகாதாரத்துறை, கேத்தி பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் லட்சுமி பவ்யா பார்வையிட்டார். இதில் கூடுதல் கலெக்டர் கவுசிக், சப் கலெக்டர் சங்கீதா உட்பட, அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.