அதன்படி, இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். மாஸ்டர் பிளான் சட்டத்தில் திருத்தம் செய்து, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டபூர்வமாக மாற்ற வேண்டும். ஊட்டி - குன்னூர் நகராட்சி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். கூடலூர் மக்களின் நீண்ட கால நில பிரச்சனை (Section 17)க்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் மற்றும் வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
தேயிலை விவசாயிகளின் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 29.03.2025 முதல் கடைகள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம். 02.04.2025 24 மணி நேர பொது வேலை நிறுத்தம், அனைத்து கடைகளும் மூடப்படும். நீலகிரி மாவட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்க மக்கள், வணிகர்கள், பொதுநல சங்கங்கள், விவசாயிகள் அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கேட்டுக்கொள்கிறது.