நீலகிரி: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நீலகிரி மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் குறும்பட காட்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தலைமை தாங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கான பயன்பாடு அதிகரிப்பு குறித்து விளக்கினார். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மழைநீர் கட்டமைப்பை அமைக்க வலியுறுத்தப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி, கிராமப்புறங்களில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, மின்னணு திரையில் குறும்படம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி