டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட எல்லைகளில் காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களை ஒட்டியுள்ள சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், பயணிகளின் ஆவணங்களும் மிகுந்த கவனத்துடன் சோதிக்கப்படுகின்றன.