நீலகிரி மாவட்டத்தில் 0 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக நேற்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் லக்ஷ்மி பாவ்யா இந்த முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார். மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள், சிறப்பு கல்வியாளர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு சிகிச்சை, ஆலோசனை மற்றும் மதிப்பீட்டு சேவைகளை வழங்கினர். மாற்றுத்திறனாளி மாணவர்களின் உடல், மனநலம் மேம்பாடு மற்றும் அரசு நலத்திட்டங்களை வழங்கும் நோக்கில் இந்த முகாம் நடத்தப்பட்டது.