நீலகிரி: முட்டைகோஸ் விலை குறைவால் விவசாயிகள் கவலை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட முட்டைக்கோஸ், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளனர். தேயிலை விவசாயத்தை அடுத்து, நீர் ஆதாரமுள்ள விளைநிலங்களில் அதிக பரப்பளவில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மண்டிகளில் ஒரு கிலோ முட்டைக்கோசுக்கு 20 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைப்பதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

அதிக முதலீடு செய்து பயிர் செய்துள்ள நிலையில், கிடைக்கும் விலை போதுமானதாக இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உள்ளூர் மார்க்கெட்டில் 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் முட்டைக்கோஸ், தேவை குறைவாக இருப்பதால் விவசாயிகள் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு லாரிகளில் கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. முட்டைக்கோஸ் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி