நீலகிரி: தேர்தல் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லக்ஷ்மி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கணக்கீட்டு படிவங்களை கணினியில் பதிவேற்றும் பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்த ஆட்சியர், பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்து, துல்லியமாகவும் காலக்கெடுவுக்கு உட்பட்டும் பணிகளை முடிக்க ஆலோசனைகள் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி