நீலகிரி: 5. 47 லட்சம் வாக்காளர்கள்-14000 பேர் புதிதாக சேர்ப்பு

நீலகிரி மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5 லட்சத்து 47 ஆயிரத்து 133 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்குப் பிறகு, மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான லட்சுமி பவ்யா அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி பட்டியலை நேற்று வெளியிட்டார். புதிய பட்டியலின்படி ஆண்கள் 2,61,317 பேர், பெண்கள் 2,85,791 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் உள்ளனர். மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். திருத்தத்திற்கு முன்பிருந்த எண்ணிக்கையை விட 42,034 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி