உதகை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்

குன்னூர் கொலக்கொம்பை அருகே நெடுங்கல்கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் கடந்த 2016ம் ஆண்டு அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து, பழங்குடியினரை மூளைச் சலவை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூர் சிறையிலிருந்த மாவோயிஸ்ட் சுந்தரி உதகை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். நீலகிரி மாவட்டம் குன்னூர் கொலக்கொம்பை அருகே நெடுங்கல்கொம்பை என்னும் கிராமத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் பழங்குடியினரை மூளைச் சலவை செய்ததாக கூறி சுந்தரி என்பவர் உட்பட டேனிஷ், ஸ்டாலின், ஷோபா, சாவித்திரி ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்த இந்த ஐந்து பேரும் கர்நாடகா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் சரணடைந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு உதகை குடும்ப நலநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கர்நாடக மாநில சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவோயிஸ்ட் சுந்தரி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கினை விசாரணை மேற்கொண்ட குடும்ப நலநீதிபதி செந்திக்குமார் மாவோயிஸ்ட் சுந்தரிக்கு 16ம் தேதி வரை காவல்துறையினர் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி