இன்றைய தினம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மகாவீர் ஜயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாவீர் ஜயந்தி என்பது மகாவீரரின் பிறப்பை நினைவுகூரும் ஒரு சந்தர்ப்பம் மற்றும் அவரது போதனைகள் மற்றும் தத்துவங்களைக் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகும். இந்த நாளில், உலகம் முழுவதும் உள்ள ஜைனர்கள் ஜைன கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து ஆசீர்வாதம் பெறுகிறார்கள். நீலகிரி மாவட்டத்திலும் ஜைன சமூகத்தினர் ஒன்றிணைந்து மகாவீர் ஜயந்தியை சிறப்பாக கொண்டாடினர். இதனை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக இழுத்துவரப்பட்டது. பஜனை மற்றும் பாடல்கள் பாடி சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.