கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரட் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கேரட்டுக்கு நிலையான கொள்முதல் விலை கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் கிலோவுக்கு ரூ. 50 ஆக இருந்த விலை தற்போது தரத்திற்கு ஏற்ப ரூ. 70 வரை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது.