இந்நிலையில் சாலையின் ஒரு பகுதியில் மட்டும் கற்கள் அமைக்கப்பட்டு மறுபக்கத்தில் கற்கள் அமைக்காமல் இருப்பதால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் மற்றும் கற்கள் பெயர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பல இடங்களில் சாலையில் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெண்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.