உதகையில் சாரல் மழை பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் காலை முதலே சாரல் மழை பெய்து வருவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. 

நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 215.6 மிலிமீட்டர் மழையும், சராசரியாக 7.43 மிலிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. உதகையில் 3.6 மிலிமீட்டர் மழையும், நடுவட்டம் பகுதியில் 3 மிலிமீட்டர் மழையும், அபிலாஞ்சி பகுதியில் 7 மிலிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும், கூடலூர் பகுதியில் 25 மிலிமீட்டர் மழையும், அப்பர் கூடலூர் பகுதியில் 24 மிலிமீட்டர் மழையும், தேவாலப் பகுதியில் 7 மிலிமீட்டர் மழையும், பந்தலூர் பகுதியில் 22 மிலிமீட்டர் மழையும், ஓவேலி பகுதியில் 6 மிலிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும், காலை முதலே சாரல் மழை பெய்து வருவதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி