நீலகிரியில் கனமழை: மரம் விழுந்து மின் தடை

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் கோடை மழை பெய்தது. கூடலூர்–கேரளம் சாலையில் மரம் விழுந்ததால் மின் தடை மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர். நீண்ட வறட்சிக்குப் பிறகு பெய்த இந்த மழையால் காட்டுத்தீ அபாயம் குறைந்து, குளிர்ந்த காலநிலையால் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அடுத்த 3 நாட்களுக்கும் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி