இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள 190 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 22.70 கோடி கடனும், நகர் பகுதியில் உள்ள 180 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 17.13 கோடி என மொத்தம் 278 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.39.83 கோடி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கா. ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள எடப்பள்ளி பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் சர்வதேச அளவில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி மைதானம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணி விரைவில் துவங்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் உதகை நகரமன்ற தலைவி வாணி ஸ்ரீ, துணைத் தலைவர் ரவிக்குமார், உட்பட அரசுத் துறை அதிகாரிகள் சுய உதவிக் குழு பெண்கள் பங்கேற்றனர்.