நீலகிரி வனக் கோட்ட வனத் துறை அலுவலர் கவுதம் தலைமையில், ரேஞ்சர்கள், வனக் காவலர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், முதுமலையில் இருந்து யானைகளை விரட்டும் கும்கி ஊழியர்கள் என, 40 பேர் கொண்ட குழு யானையை விரட்டினர். யானை கடந்த மூன்று நாட்களாக கேத்தி ரயில் நிலையம், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்தது.
இந்த நிலையில் தீட்டுக்கல் பகுதியில் சுற்றித் திரிந்த இந்த யானை தற்போது எமரால்ட் பகுதியில் குடியிருப்பு தேயிலைத் தோட்டம் சாலை என அனைத்து பகுதிகளிலும் சுற்றி வருகிறது. உதகை எமரால்ட் லாரன்ஸ் பகுதியில் சுற்றித் திரிந்த யானையைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதனை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.