இந்தநிலையில் தற்போது உதகை , கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட கேரட்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள கேரட் ரூபாய் 60 முதல் 70 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கேரட் 80 ரூபாய் முதல் ரூபாய் 90வரை தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யபட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.