நான்கு நாட்களுக்குப் பிறகு தொட்டபெட்டா மலை சிகரம் திறப்பு

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் சுமார் நான்கு நாட்கள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாமல் தொட்டபெட்டா மலை சிகரம் மூடப்பட்டிருந்தது. கோடை சீசனில் அதிகமான சுற்றுலா பயணிகள் மலை மாவட்டத்திற்கு வருகை புரிவதால் தொட்டபெட்டாவிற்கு செல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

 காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறை அலுவலர் கௌதம் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். வனத்துறை ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போழுது யானை குன்னூர் பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக வனத்துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் தொட்டபெட்டா மலை சிகரம் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்தி