நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு

நீலகிரி மாவட்டத்தில் உயர்நீதிமன்றம் அமல்படுத்தியுள்ள இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு செய்தும், ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்கள் எதுவும் இல்லாததால் நகரப்பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹோட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள், சிறுகுறு வணிக நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என இ.பாஸ் புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். சோதனை என்ற பெயரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுகிறது என அபராதங்கள் விதிப்பது, கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட 12 அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் முழு கடையடைப்பு செய்தும், பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உணவகங்கள், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரப்பகுதியில் முற்றிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி