இந்நிலையில் உதகை தாஸ் பிரகாஷ் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று உலாவருவதாகவும், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்களை வேட்டையாடுவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். எனவே மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றித்திரியும் சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே தாஸ் பிரகாஷ் குடியிருப்பு பகுதியில் உலாவரும் சிறுத்தை குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, கால்தடங்களை சேகரித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.