நீலகிரி: விவசாயிகளுக்கு கை கொடுக்கும் பண்ணக்குட்டை

நீலகிரி மாவட்டத்தில் கோடை காலங்களில் தண்ணீர் கட்டுப்பாட்டை சமாளிக்க விவசாயிகளுக்கு பண்ணை குட்டை என்னும் தற்காலிக பிளாஸ்டிக் கிணறு விவசாயிகளுக்கு கைகொடுத்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். 

தொடர்ந்து அக்டோபர் மாதம் துவங்கி இரண்டு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குறித்த சமயத்தில் பருவமழை பெய்வது இல்லை. கோடையில் மழை பெய்யாத சமயங்களில் விவசாய நிலங்கள் தண்ணீர் பாய்ச்சுவதில் விவசாயிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தற்போது பண்ணை குட்டை என்னும் பிளாஸ்டிக் கிணறுகளை உருவாக்கி, இதன் மூலம் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் கிணறுகளில் தண்ணீர் நிரப்பி, அதிலிருந்து தண்ணீர் எடுத்து மைக்ரோ ஸ்பிரிங்கிளர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். 

மேலும் இது குறித்து கூறுகையில், தங்களுடைய வாழ்வாதாரமே விவசாயத்தை நம்பியே உள்ளதாகவும், விவசாய நிலங்களில் போர்வெல் போடுவதற்கு மாவட்ட நிர்வாகம் பெரும் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாகவும், அதனால்தான் விவசாய நிலத்திற்குள் பண்ணை குட்டை அமைத்து தண்ணீரை சேமித்து விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

தொடர்புடைய செய்தி