சென்னை வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் அதிகபட்சமாக 68 மில்லி மீட்டர் மழையும், குன்றத்தூர் பகுதிகளில் 61 மில்லி மீட்டர் மழையும், கிண்ணக்குறிச்சி பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும், பாலகுளத்தில் 25 மில்லி மீட்டர் மழையும், குன்னூர் பகுதியில் 9 மில்லி மீட்டர் மழையும், கேத்தி பகுதியில் 16 மில்லி மீட்டர் மழையும், நடுவட்டம் பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும்,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 22 மில்லி மீட்டர் மழையும், கீழ்கோத்தகிரி பகுதிகளில் 15 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.