நீலகிரியில் மழை இவ்வளவா?

நீலகிரி மாவட்டத்தில் அதிகப்படியாக மாலை நேரத்தில் 179 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 6.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விதிக்கப்பட்டிருந்த நிலையில், உதகையில் காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வந்தது. மாலை நேரத்தில் சாரல் மழை பெய்யத் துவங்கி, கடும் குளிர் காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மேலும் அதிகபட்சமாக அப்பர் பவானி பகுதியில் 20 மில்லிமீட்டர் மழையும், அவலாஞ்சி பகுதியில் 25 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதனால் கடும் குளிர் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி