நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக துவங்கியது. இந்த 10 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 275 வகையான மலர்கள் மற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இத்தாலியன் கார்டன் அருவி அலங்காரம், கார்னேசன் மலர் வடிவங்கள், தமிழ் மரபுகளை பிரதிபலிக்கும் 30க்கும் மேற்பட்ட அலங்காரங்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளன. மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.