நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்ச் செம்மல் விருதுபெற நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களைக் கண்டறிந்து தமிழ்ச் செம்மல் விருதும் 2500 பரிசுத்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு www.tamilvalarchithurai.com வலைதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.