நவக்கரை: பெண்ணை தாக்கி கொள்ளை, கொலை முயற்சி

கோவை, நவக்கரை மவுத்தம்பதியில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில், பெண்ணை கொலை செய்ய முயன்ற கொள்ளையர்களின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயி நாராயணசாமி வீட்டில் நான்கு முகமூடி மனிதர்கள் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற நாராயணசாமியின் மனைவி காளீஸ்வரியை கொடூரமாக தாக்கி, நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றனர். 

இச்சம்பவம் குறித்து உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காளீஸ்வரியை மீட்டு மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ரூ. 20,000-ஐ திருடிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். க.கசாவடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி