உடற்பயிற்சிக் கூடத்தில் திருடிய வாலிபர் கைது

மேட்டுப்பாளையம் இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த் (38). இவர் காரமடை பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி வழக்கம் போல ஜிம்மை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். மறுநாள் காலையில் ஜிம்முக்கு அருகில் இருப்பவர்கள் ஜிம்மின் சட்டர் உடைக்கப்பட்டு இருப்பதாக நிஷாந்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உள்ளே சென்று பார்த்தபோது ஐந்தாயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. காரமடை காவல் நிலையத்தில் இவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் (34) என்பவரை கைது செய்தனர். இவர் மேல் ஏற்கனவே பல குற்ற வழக்குகள் பாலக்காட்டு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. நேற்று விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி