பெண் ஆசிரியை, வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவிகளிடம் அநாகரிகமாகவும் அத்துமீறியும் நடந்து கொண்டதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. குறிப்பாக, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரிடம் கடந்த ஒரு வருடமாக ஓரினச்சேர்க்கை மற்றும் தவறான தொடுதல் போன்ற முறையில் அத்துமீறியதாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்தார். உடனடியாக பெற்றோர், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் இந்த புகார் மேட்டுப்பாளையம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில், குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து அத்துமீறிய பள்ளி ஆசிரியை மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை கைது செய்த போலீசார், இன்று(செப்.30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.