அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் பயந்து போன மாணவி வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து அதே நபர் மீண்டும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வண்ணமாக இருந்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த கல்லூரி மாணவி இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மேட்டுப்பாளையம் சேரன் நகர் பாக்குக்கார தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி பஷீர் அகமதுவை (46) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.