சிறுவாணி மெயின் ரோட்டில் நேற்று (டிசம்பர் 16) நடந்த விபத்தில், அரசு பஸ் மோதி 87 வயதான விவசாயி கோவிந்தசாமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவிந்தசாமி தனது பேத்தியை பள்ளியில் விட்டுவிட்டு, ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசு பஸ் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.