இந்த விபத்தில் முதியவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக முதியவர் காயங்களுடன் உயிர்த்தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரமடை போலீசார் கார் மோதி காயமடைந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் முதியவர் மீது கார் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்