கோவை: கள்ளக்காதலியின் கணவரை தாக்கிய வாலிபர் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர்(37). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த விவகாரம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர் கள்ளக்காதலை கைவிடுமாறு அவரை கண்டித்தார். இதனால் அந்த பெண் தனது கள்ளக்காதலை முறித்துக்கொண்டார். இதனால் சங்கர் ஆத்திரத்தில் இருந்தார். 

இந்நிலையில், நேற்று சங்கர் தனது கள்ளக்காதலி வீட்டுக்குச் சென்றார். அப்போது வாசலில் நின்றிருந்த கள்ளக்காதலியின் கணவரை தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டுக்கட்டையால் தாக்கினார். சத்தம் கேட்டு வெளியே வந்த முன்னாள் கள்ளக்காதலியையும் அடிக்க முயன்று மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கள்ளக்காதலியின் கணவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி