கோவை: முதலீடு பெற்று மோசடி-மூவர் கைது!

உரிய அங்கீகாரம் இன்றி மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி முதலீடு வசூலித்து மோசடி செய்ததாக விஜயா பானு, ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ. 12 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அன்னை தெரேசா மகளிர் அறக்கட்டளை என்ற பெயரில் இவர்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்துள்ளனர். 

முதலீடு செய்தால் ஏழு மாதத்தில் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர். முதலீட்டாளர்களிடம் ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி காசுகள் பரிசு என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு மக்களை கவர்ந்துள்ளனர். இந்த விளம்பரங்களை நம்பி நூற்றுக்கணக்கானோர் திரண்டு முதலீடு செய்துள்ளனர். 

சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து ஓராண்டுக்கு மேலாக இந்த மோசடியை நடத்தி வந்துள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம், பொதுமக்கள் முதலீடு செய்வதற்கு முன் போதிய ஆதாரங்களை சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.

தொடர்புடைய செய்தி