சரவணம்பட்டி: திட்டிய மனைவி-காணாமல் போன கணவன்

மகேஷ் மற்றும் அனுசியா ஆகிய இரண்டு பேரும் சென்னையில் பணியாற்றிய போது பழக்கம் ஏற்பட்டு, சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு சென்னையில் இருந்து கோவைக்கு வந்து சின்ன வேடம்பட்டி பகுதியில் குடியேறி தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் அனுசுயா திருத்தணியில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்பொழுது வீட்டை சுத்தமாக வைக்கவில்லை என அனுசுயா மகேசை திட்டி இருக்கிறார். இதில் கோபமடைந்த அவர் கடந்த மாதம் 17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை.

அவருக்குத் தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்துவிட்டு அனுசியா நேற்று(அக்.06) கணவனை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றன. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என மனைவி திட்டியதால் கோபித்துக் கொண்டு காதல் கணவன் காணாமல் போனது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி