இதையடுத்து அந்த யானை கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க, டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து முத்து மற்றும் சுயம்பு என்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன. இதன் இடையே கடந்த வாரத்தில் கும்கி யானை சுயம்புவிற்கு மதம் பிடித்திருப்பது தெரியவந்ததை அடுத்து, வனகால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி சுயம்பு யானை டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டது. இந்த நிலையில் முத்து யானைக்கும் மதம் பிடிப்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதை அடுத்து வனகால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி முத்து யானையும் டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு லாரி மூலம் அழைத்து செல்லப்பட்டது. இருப்பினும் காட்டு யானையை விரட்ட சின்னத்தம்பி என்ற கும்கி யானையை டாப்சிலிப் முகாமில் இருந்து அழைத்து வர முடிவு செய்யப்பட்டிருப்பதாக வன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?