சண்டையை தடுக்க முயன்றவர்களிடமும் அந்த பெண் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, அவர்களையும் தாக்க முயன்றார். இதனால் அங்கு கூடியிருந்த அனைவரும் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தனர். இதனிடையே, அங்கு வந்த இரு பெண் காவலர்கள் அந்தப் பெண்ணிடம் இருந்த கம்பை பிடுங்க முயன்றபோது, அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்கவும் முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பெண் காவலர்கள் சாதுர்யமாக செயல்பட்டு அந்தப் பெண்ணிடம் இருந்த கம்பை பறித்தனர். அதன் பிறகு, அங்கு வந்த ஆண் காவலர்கள் அந்த ஆணையும் பெண்ணையும் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேற்றினர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு