நீலகிரி மாவட்டம் சேரங்கோடு சேரம்பாடி சுற்றுப் பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வரும் புல்லட் ராஜா காட்டு யானையின் ட்ரோன் கேமரா மூலம் தேடி வரும் வனத்துறையினர் மற்ற காட்டு யானைகளின் கூட்டத்தின் நடமாட்டத்தை பதிவு செய்து அந்தக் கூட்டத்தில் புல்லட் ராஜா காட்டு யானை உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் புல்லட் ராஜா காட்டு யானையை ட்ரோன் கேமரா மூலம் தேடி வரும் வனத்துறையினரிடம் இருந்து புதருக்குள் ஒளிந்துக் கொள்ளும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.