கூடலூர் பகுதியில் பெண் ஒருவர் வெட்டி கொலை

கூடலூர் அருகே காசிம்வயல் பகுதியில் வசித்து வந்த ஜெனிபர் வயது-32 என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காசிம்வயல் பகுதியில் வசித்து வருபவர் மெய்தீன் குட்டி ஹாஜியின் மகன் அலி இந்த கொலையில் தொடர்புடையவராக இருக்கலாம் என்பதாக தகவல் வெளியானது. சம்பவத்திற்குப் பிறகு, அவர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்கு பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது. மேலும், இந்த கொலையின் பின்னணி காரணங்களை ஆராய காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி