முதுமலை புலிகள் காப்பகத்தில் உள் மற்றும் வெளிமண்டல வனப்பகுதிகள் உள்ளது. வெளிமண்டலமான மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து வருகிறது. தற்போது மாலை நேரத்தில் கோடை மழை பரவலாக பெய்வதால், கோடை வறட்சியின் தாக்கம் படிப்படியாக குறைந்து வனப்பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக உணவு, தண்ணீர் தேடி பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்ற காட்டு யானைகள் மீண்டும் முதுமலைக்கு திரும்புகின்றன. இதனால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் மசினகுடி அருகே மாயாற்றில் தண்ணீர் அருந்த 2 காட்டு யானைகள் வந்தன. ஆற்றில் தண்ணீர் அருந்திய பின்னர், 2 யானைகளும் திடீரென சண்டையிட்டன. சிறிது நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்றன. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.