முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளான மசினகுடி, மாயார், பொக்காபுரம், வாழைத்தோட்டம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வன பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. இதனால் மாலை நேரங்களில் யானை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரங்களில் உலா வருவதோடு, தண்ணீர் அருந்த சாலைகளை கடந்து செல்கின்றன. சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது என வனத்துறை அறிவித்துள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.