இது சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி வனவலயங்களை இணைக்கும் முக்கியமான வனப்பகுதியாகும். இரவு நேரத்தில் அந்த வழியாக சென்ற அந்த ஊரில் வசிக்கும் ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், மான் ஒன்றை குறி வைத்து பாய்ந்து பிடித்து வேட்டையாடி வனப்பகுதிக்குள் இழுத்து செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இது வனவிலங்கு உலகின் இயற்கை சுழற்சி எப்படி வேலை செய்கிறது என்பதற்கான ஒரு நேரடி சான்றாகவும் அமைகிறது.
வனத்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், இது காட்டில் இயற்கையாக நடைபெறும் வேட்டைக்காட்சியாகும். இரவு பகல் நேரங்களில் மாயார் பாலம் பகுதியில் வாகனங்களில் சாலையை கடக்கும்போது, விலங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து மெதுவாகச் செல்ல வேண்டும் என்பதே வனத்துறையின் எச்சரிக்கை என்றனர்.