நீலகிரி: வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற சிறுத்தை; வைரல் வீடியோ

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்புப் பகுதியைநோக்கி வருவதாலும், வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாடிச் செல்வதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி இந்திரா நகர் குடியிருப்பில் சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயை பிடித்துக்கொண்டு கேட்டின் மீது தாவிச் செல்லும் வீடியோ அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி