இதனால் மயானத்தில் விஷ ஜந்துக்கள், தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அத்துடன் மயானத்தில் சிமெண்ட் கான்கிரீட்டால் அமைக்கப்பட்ட நடைபாதை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதுடன் அதில் மழை பெய்து சேறும், சகதியாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக மயானத்திற்கு வருபவர்கள் சேறும், சகதியுமான நடைபாதையில் வழுக்கி விழுவது, புதர் மறைவில் இருந்து வரும் விஷ ஜந்துக்கள் தாக்குதலுக்கு ஆளாவது உள்ளிட்ட சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் மயானத்தில் புதர் மண்டி கிடக்கும் செடி-கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும். சேதமடைந்துள்ள நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.