மூத்தோர் கால்பந்து போட்டியில் உதகை அணி வெற்றி

நீலகிரி மாவட்ட கோத்தகிரி காந்தி மைதானத்தில்  கடந்த இரண்டு நாட்களாக  எடப்பள்ளி பெள்ளி கவுடர் நினைவு மூத்தோர் கால்பந்து போட்டி மாநில அளவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நீலகிரி , கோவை, கர்நாடகா, என எட்டு அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டி நீலகிரி ப்ளூ அணிக்கும், கேஎஃப்சி நீலகிரி  அணியும் மோதினர்  இதில் இரண்டு கோல் நீலகிரி ப்ளூ அணி அடித்து வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு  கோப்பைகளை பார்ப்பதி ஹாலகவுடர், 19 ஊர் தலைவர் ராமாகவுடர், கைகாரு சீமை தலைவர்  நஞ்சாகவுடர், ஆயிரம் வீடு தலைவர்  சீரளகவுடர், எட்டூர் தலைவர் ஹாலா கவுடர், கோத்தகிரி ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

மேலும் இந்த போட்டியில் எடப்பள்ளி சேர்ந்த சிறுவர்கள் அண்ணன் தம்பிகள் இருவரும் காந்தி மைதானத்தை தூய்மைப் பணியில் ஈடுபட்டன. அவர்களை கால்பந்து குழுவினர் கௌரவித்தனர். இந்த கால்பந்து விழாவை எடப்பள்ளி கங்கியம்மாள் குடும்பத்தினர் மற்றும் கேர்பன் சிங்கு ஜோகி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி