உதகை: பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம்

உதகை அருகே உள்ள பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் புலி ஒன்று சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை சாலையை கடக்கும் போது புலி சிலரால் கண்டதாக கூறப்படுகிறது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று புலியின் காலடிச்சுவடுகளை உறுதி செய்து, அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி