நீலகிரி: 50 அடி பள்ளத்தில் விழுந்த சரக்கு லாரி: உயிர் தப்பிய ஓட்டுநர்

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (பிப்ரவரி 13) அதிகாலை கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து கூடலூர் வழியாக உதகை நோக்கி அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வந்த சரக்கு லாரி தவளமலை அருகே வந்துக்கொண்டிருந்தது. 

லாரி மலைப்பாதையில் செல்லும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நடுவட்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து காரணமாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாததால் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன, 

மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் சாலையின் நடுவே விழுந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சீர் செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி