உதகை: கழிப்பிட வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதி

சுற்றுலா நகரம் என்று அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் இருந்து நாள்தோறும் அன்றாட தேவைகளுக்காக ஏராளமான பொதுமக்கள் உதகை மார்க்கெட் பகுதிக்கு வருகை புரிகின்றனர். 

இந்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சேரிங்கிராஸ், ஏடிசி, மத்திய பேருந்து நிலையம், கமர்சியல் சாலை, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி கட்டுப்பாட்டில் கட்டண கழிப்பிடங்கள் செயல்பட்டு வந்தன. இந்த கட்டண கழிப்பிடங்கள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதால் அதனை பயன்படுத்தும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. 

தற்போது இந்த பகுதிகளில் பயன்பாட்டில் இருந்து வந்த கழிப்பிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் சுமார் 15க்கும் மேற்பட்ட கழிப்பிடங்கள் கட்ட ஒரே ஒரு ஒப்பந்ததாரருக்கு மட்டுமே ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போதிய வேலையாட்கள் இல்லாததால், கழிப்பிட கட்டிடங்கள் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதோடு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி